Search
Close this search box.
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர் திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை சாந்தி கிரியைகள் நடைபெற்றதுடன் இன்று அதிகாலை பூஜை வழிபாடுகளை தொடர்ந்து தேர் திருவிழா இடம்பெறுகின்றது

15 நாட்களுடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் இன்று தேர் திருவிழா நடைபெற்று நாளை வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறவுள்ளது

இதேவேளை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி இம்முறையும் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையில் விசேட பேருந்து சேவைகளும் குறிகாட்டுவான் – நயினாதீவு இடையில் விசேட படகு சேவைகளும் இடம்பெறுகின்றது

அத்துடன் அமுதசுரபி அன்னதான மடத்தில் பக்கதர்களுக்கு அன்னதானம் இடம்பெறுவதுடன் ஆலய சூழல்களில் பக்தர்களின் நலன் கருதி அம்புலன்ஸ் ,சென்சிலுவை சங்கம் மக்கள் நலன்புரி சங்கம் உள்ளிட்டவற்றின் தொண்டர்களும் சேவைகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring

More News