Search
Close this search box.
ரணிலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கருணா…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பாணந்துறை தல்பிட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். கடந்த காலம் அனைவருக்கும் தெரியும். முன்னாள் ஜனாதிபதி அனைத்து துறைகளையும் அழித்தார்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னரே நாம் நல்லதொரு நிலையை அடைந்துள்ளோம்.

குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.அதனால்தான் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க அனைத்து மக்களும் தயாராக உள்ளனர்.

அதனால்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எமது கட்சி ஆதரவளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

Sharing is caring

More News