மகுலுகஸ்வெவ பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்றை நடத்தி வந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ராணுவ சீருடைகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.