நாட்டில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது.
மின்சாரம் எரிபொருள் எரிவாயு இல்லாத ஒரு நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது வேடிக்கையான விடயமாகும்.
அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொண்டார்.
தற்போது நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியானது பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உள்ளது.
நாட்டில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனூடாக சுற்றுலாத்துறை வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறப்படுத்துவதற்கும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.