அநுராதபுரம் பிரதேசத்தில் 13 வயது தேரரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் அநுராதபுரம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் நகரத்தில் உள்ள விகாரையொன்றில் வசித்து வந்த 22 வயதுடைய தேரரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான தேரர் அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு விகாரையொன்றில் பணிபுரிந்து வரும் நிலையில்,
தனிப்பட்ட தேவை காரணமாக முன்னர் பணிபுரிந்த விகாரைக்குச் சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான தேரர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட தேரர் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.