Search
Close this search box.
24 வருடங்களில் முதன்முறையாக வடகொரியா செல்லும் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த 24 வருடத்தில் முதல்முறையாக வடகொரியா செல்ல இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் இரண்டு நாள் பயணமாக வடகொரியா செல்கிறார்.

வடகொரியா செல்லும் அவர் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பை நீடிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை ரஷ்யா உறுதிப்படுத்திய நிலையில், வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் இது தொடர்பில் தகவல் வெளியிடவில்லை.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் கடந்த ஆண்டு ரஷியா சென்றிருந்த நிலையில் ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷ்யா வடகொரியாவுக்கு வழங்க இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிராக பீரங்கிகள், ஏவுகணைகள், மற்ற ராணுவ பொருட்கள் வழங்கி உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் நீடிக்க வடகொரிய உதவி செய்து வருவதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இருப்பினும் ஆயுத பரிமாற்றம் நடைபெறவில்லை என வடகொரியா மற்றும் ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News