கொரோனா வைரஸை விட மோசமான ஸ்ட்ரெப்டோகாக்கல் டோக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (STSS) என்ற பக்டீரியா அவுஸ்ரேலியா , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும், இது இலங்கைக்கும் பரவும் அபாயம் உள்ளதாகவும் சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த பக்டீரியா மனித உடலினுள் நுழைந்தால், நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் இறப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜப்பானில் வேகமாகப் பரவிவரும் இந்த பக்டீரியாவால் நேற்று முன்தினம் (16ஆம் திகதி) வரை 977 ஜப்பானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 77 பேர் உயிரிளந்துள்ளதாகவும் ஜப்பானிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி மரணங்கள் 2024 ஜனவரி மற்றும் மார்ச்மாதங்களுக்கிடையில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடதக்கது
தசையை கரைக்கும் இந்த கடுமையான பக்டீரியா தற்போது ஜப்பானில் வேகமாக பரவி வருகிறது, மேலும் இந்த நோய் அடுத்த ஆறு மாதங்களில் 1,500 பேருக்கு பரவக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், அதை தடுக்க அந்நாட்டு சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தொண்டை வலி, கைகால் வலி, குறைந்த இரத்த அழுத்தம், உறுப்பு செயலிழப்பு மற்றும் உடல் வீக்கம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கணிசமான எண்ணிக்கையிலான ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதாலும், இலங்கையில் இருந்து மக்கள் செல்வதாலும் இந்த கொடிய பற்றீரியா இலங்கைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதாரத் துறை வீழ்ச்சியடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, நாற்பது பேரைக் கொல்லக்கூடிய இதுபோன்ற பக்டீரியாக்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க சுகாதார அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் விஜேசிங்க கூறுகையில்,
இது உலகளாவிய தொற்றுநோயாக மாறவில்லை. எனவே இது தொடர்பில் இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் ஜப்பானில் இவ்வாறான கொடிய பக்டீரியா பரவியுள்ள போதிலும், உலக சுகாதார ஸ்தாபனம் அது தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிவிப்பையும் அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான பக்டீரியாக்கள் நாட்டிற்குள் நுழைந்தால், தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்காக சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதாகவும் ,ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியாவில் பரவியுள்ளதாக கூறப்படும் இந்த பக்டீரியா தொடர்பில் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.