Search
Close this search box.
இலங்கையில் 42 பேருக்கு மரண தண்டனை – சபையில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில், கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் வைத்து 42 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1959 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையிலும் 31 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

1969 ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரையிலும் 42 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். அதற்கு பின்னர் இலங்கையில் மரண தண்டனை அமுலில் இல்லை என தெரிவித்தார்.

Sharing is caring

More News