Search
Close this search box.
இலங்கையில் விளைந்த அபூர்வ மரவள்ளிக்கிழங்கு: காணக் குவியும் மக்கள்

பிலிமதலாவ (Pilimathalawa) – மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ஒன்று உற்பத்தியாகி உள்ளது

63 வயதான ஓய்வூதியரான சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டுள்ளது.

அவர் தனது அன்றாட வாழ்க்கைக்காக தோட்டத்தொழில் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மரவள்ளி பயிரிட்ட நிலையில் நேற்று முன்தினம் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்துள்ளார்.

அங்கு, ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார் அதை எடைபோட்டபோது, ​​​​44 கிலோ கிராம் இருந்தாக தெரியவந்துள்ளது.

இந்த அபூர்வ கிழங்கை பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் அதிகளவில் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring

More News