இஸ்ரேலுக்கு (Israel) ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கும் இறுதித்தறுவாயில் அமெரிக்கா இருப்பதாக கூறப்படுகிறது,
இது இறுதியாக அங்கீகரிக்கப்பட்டால், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி காசாவில் போர் ஆரம்பித்ததன் பின்னர், இஸ்ரேலுக்கு, அமெரிக்கா வழங்கும் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆயுத விற்பனையாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வோசிங்டன் போஸ்ட்டின் அறிக்கையின்படி, அமெரிக்க காங்கிரஸில் உள்ள இரண்டு முக்கிய ஜனநாயகக் கட்சியினர் இஸ்ரேலுக்கு 18 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள 50 எப்-15 போர் விமானங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ஆயுத விற்பனையை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், ஜோ பைடன் (Joe Biden ) நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தின் கீழ், பிரதிநிதி கிரிகோரி மீக்ஸ் மற்றும் செனட்டர் பென் கார்டின் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலிய படையினர், ஹமாஸிற்கு எதிராக மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை, 37ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் பெண்களும் சிறுவர்களுமே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.