மணமகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, இணையம் ஊடாக பெண்கள் மோசடிகளில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அண்மையில் சுமார் 150 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கணனி குற்ற விசாரணைப் பிரிவு (Criminal Investigation Department) தெரிவித்துள்ளது.
பத்திரிகையில் விளம்பரம் செய்து வாடஸ்அப் மூலம் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொண்டு லட்சக் கணக்கான ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
தனது சாரதியின் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறி ஒரு பெண்ணிடம் இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ மேஜரின் விளம்பரங்களில் சிக்கி ஏமாந்த பெண்களின் எண்ணிக்கை பத்து என இதுவரையில் நடைபெற்ற விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.