Search
Close this search box.
களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம்!

பேலியகொட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பின்புறம் களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (17) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும்,

உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 06 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,

பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring

More News