துப்பாக்கிகள் மூலம் சொத்துக்களை கொள்ளையடித்த கும்பலொன்றின் சந்தேகநபர்களில் மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் நில் பனாகொட, திவுலபிட்டிய பின்னகலேவத்த மற்றும் தலுமொட்டாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், 8 துப்பாக்கி குண்டுகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு, திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 6 கத்திகள், பல வீடுகளை உடைக்கும் கருவிகள் மற்றும் பல தங்க ஆபரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் களுமடை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையத்தில் வைத்தியர் ஒருவரின் கையிருப்பு தங்க நகைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விளைவாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவமானது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதாக தெல்வகுர பிரதேசத்தில் இருந்து கிடைத்த தகவலின் பேரில், தெல்வகுர பகுதியில் பொலிஸ் குழுவொன்றினால் வீதித்தடை ஏற்படுத்தப்பட்டது.
இதன் போது அவ் வீதியினூடாக தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த வேளையில் பயணித்த இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்களைக் கைது செய்த பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட சோதனையின் போது சந்தேகநபர் ஒருவரின் பிறப்புறுப்பு பகுதியில் கைக்குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றைய நபரிடம் இருந்து நான்கு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மினுவாங்கொட கட்டு அலேகம பிரதேசத்தில் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. .
மேலும், இவர்கள் மோட்டார் சைக்கிள்களில் போலி இலக்கத் தகடுகளுடன் பயணித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து படல்கம பிரதேசத்தில் இரண்டு வழக்குகளும் , கட்டான மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுகளில் தலா ஒரு வழக்கும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.