Search
Close this search box.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று (17) சிறப்பாக நடைபெற்றது.

பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை (Ampara)  மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றன.

இதன் போது மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.

இதன்பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர்

கிண்ணியா (Kinniya) குறிஞ்சாக்கேனி வீசி மைதானத்தில் இன்று (17) காலை ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது.

இதில் பெரும்பாலானவர்கள் தொழுகையில் கலந்து கொண்டதுடன் குத்பா பிரசங்கமும் இடம் பெற்றது.

மேலும். திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sharing is caring

More News