சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ். குமாரசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ரஜரட்ட விவசாயிகள் மாநாடு நேற்று (16) பிற்பகல் அனுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன்போதே அவர் சஜித் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய சஜித் பிரேமதாச,
லண்டன் அல்லது வேறு எந்த நாட்டிற்கும் செல்வதை விட ரஜரட்ட விவசாயியுடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.