Search
Close this search box.
கொழும்புக்கான நீர் விநியோகம் தாமதமாகலாம்: வெளியான காரணம்

லபுகம நீர்த்தேக்கத்தில் இருந்து கொழும்புக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பெரிய குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் இன்று (17) அதிகாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி குழாயில் மோதியதில் இவ்வாறு உடைப்பு ஏற்பட்டுள்ளது.

நீர் குழாயில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் நீர் வெளியேறி வீணாகி வருவதுடன் குறித்த இடத்தில் உள்ள மின்கம்பமும் உடைந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் சிக்கிய கார் சாரதி உட்பட இருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கார் அதிவேகமாக வந்து வீதியை விட்டு விலகி தண்ணீர் குழாயில் மோதி கவிழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த நீர் குழாயில் ஏற்பட்ட பாரிய சேதம் காரணமாக கொழும்புக்கான நீர் விநியோகம் தாமதமாகலாம் என நீர் வழங்கல் சபையின் மஹரகம வலய அலுவலகம் தெரிவித்துள்ளது.

Sharing is caring

More News