Search
Close this search box.
இலங்கை மக்களின் வருமானத்தில் ஏற்படவுள்ள சாதகமான மாற்றம்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை கடனை பெற்றுக்கொள்வதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் தவணை மூலம் வருமானத்தை பெருக்க பல வாய்ப்புகள் உருவாகும் எனவும் பொருளாதார நன்மைகளை மக்கள் நேரடியாகப் பெறுவார்கள் எனவும் தெரிவித்தனர்.

மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்காத நாடாக மாற்றுவதன் மூலம் பொருளாதாரத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்ல முடியும். இளைஞர்கள் அதிக வருமானம் பெறும் நாடாக மாற்றுவதுடன், அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என ராஜாங்க அமைச்சர்கள் மேலும் தெரிவித்தனர்.

நாட்டிற்கு புதிய முதலீடுகள் கொண்டு வரப்படும், வேலையில்லா திண்டாட்டம் நீங்கும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை சட்டப்பூர்வமாக்கும் மற்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

மூன்றாவது தவணை கடனைப் பெறுவது ஒரு நாடு என்ற வகையில் ஒரு பெரிய சாதனையாகும், இதன் மூலம் இழந்த சர்வதேச நிதி நம்பிக்கையை மீண்டும் பெற முடிந்தது.

மூன்றாவது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் நிதிக் கட்டுப்பாட்டுக்கான சட்ட அமைப்பு வலுப்பெறும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட முறையின் கீழ் நாட்டின் வாகன இறக்குமதி மீள ஆரம்பிக்கப்படும். வட்டி வீதக் குறைப்பின் அனுகூலத்தை வர்த்தகர்களுக்கு வழங்க மத்திய வங்கி தயாராக உள்ளதென ராஜாங்க அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Sharing is caring

More News