முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு சொந்தமான ஹொரகொல்ல வளவ்வே தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட நபரின் மீது துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் காணி காவலாளிகள் இருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நிட்டம்புவ ஹொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து வட்டுபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி தாக்குதலானது உரிமம் பெற்ற துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளது. என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.