Search
Close this search box.
சமுர்த்தி பயனர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

அரசியல் தலையீடுகளாலும் பல்வேறு கோரிக்கைகளாலும் பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

அதன்படி சமுர்த்தி வங்கியின் தலைமையகம் மற்றும் சமூக வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய திட்டமானது “புதிய கிராமம் – புதிய நாடு” என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெறுவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring

More News