இலங்கை கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளின் சேவை காலத்தை மேலும் 8 வருடங்கள் நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல(Lakshman Kiriella) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (10) கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை கூறியுள்ளார்.
”இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற்று வரும் காலப்பகுதியில் திடீரென இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியின் ஊடாக, கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் செயலாளர் 8 வருடங்கள் பதவி வகித்து அந்த பதவிகளை விட்டு வெளியேறியதன் பின்னர், மேலும் 16 வருடங்கள் நிறைவேற்று உறுப்பினர்களாக பணியாற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.