இலங்கையில் (srilanka) அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான அழகுசாதன பொருட்கள் கிறீம் வகைகள் போன்ற எவ்வித தர நிர்ணயங்களுக்கும் உட்படுத்தப்படாது சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயன்பாட்டில் காணப்படும் அழகுசாதன கிறீம் வகைகளின் இரசாயன கலவை குறித்து பரிசோதனை செய்வதற்கு போதியளவு ஆய்வு கூடங்கள் இல்லாமை பாரிய பிரச்சினை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது நாட்டில் பாரிய சுகாதார பிரச்சினைகளை உருவாக்கும் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையிடம் போதியளவு ஆய்வுகூட வசதிகள் கிடையாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும், இந்த கிறீம் வகைகளை பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடிய உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வுகூடங்களை பயன்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.