Search
Close this search box.
போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர் சங்கம்: பாடசாலை விடுமுறை தொடர்பில் குழப்பநிலை

இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்நாளுக்கான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன்  நடைபெற்ற பேச்சு தோல்வி அடைந்துள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தமது உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

Sharing is caring

More News