கிளிநொச்சி முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய அதன் அதிகாரிகள் குழுவொன்று குறித்த பகுதிக்குச் சென்று ஸ்கேனர்களைப் பயன்படுத்தி தங்கத்தை தேடும் வேளையில் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த நிலையம், போரின் போது விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிற்குச் சொந்தமான அன்பு முகாம் இருந்த இடமாக சந்தேகிக்கப்படுவதுடன், சந்தேகநபர்கள் இந்த ஸ்கேனர்களைப் பயன்படுத்தி அந்த அமைப்பினால் புதைத்த தங்கத்தை கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் மேலதிகமாக அதி தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர்கள், ஒரு கார் போன்றவையும் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர்களில் இருவர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய சந்தேக நபர்கள் கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்டுள்ளவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.