புதுக்குடியிருப்பிலுள்ள தேவிபுரம் எனும் பகுதியில் கிணற்றிலிருந்து 992 விமான எதிர்ப்பு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர், காணியில் உள்ள பழைய கிணற்றை துப்புரவு செய்யும் போதே குறித்த குண்டுகள் இருப்பதை கண்டறிந்துள்ளார். அதனையடுத்து புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவ் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் கண்டெடுக்கப்பட்ட இவ் வெடிபொருட்கள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.