பொலிஸ் திணைக்களம் சுயாதீனமான நிறுவனமாக மாற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹரகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளின் உரிமையாளர்களாக அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமது ஆட்சியின் கீழ் எதிர்காலத்தில் பொலிஸ் திணைக்களம் மட்டுமன்றி ஒட்டு மொத்த அரச இயந்திரமும் அரசியல் கைப்பாவைகளாக செயற்படுவது தவிர்க்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மையையும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் உறுதி செய்யக் கூடிய வகையில் ஆட்சி முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதனை தடுக்கும் முனைப்புக்களில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஈடுபட்டு வருவதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.