வாதுவை – பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இவர் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நீல நிற காற்சட்டையும் வெள்ளை நிற சட்டையும் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.