பொதுத் தேர்தலாக இருந்தாலும், அதிபர் தேர்தலாக இருந்தாலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு தேர்தலுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாரெனவும் அது தொடர்பில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிரான அவரது அறிக்கை குறித்து அவரிடம் வினாவிய போது, அவர் மட்டுமல்ல கட்சியின் 99 சதவீதம் பேரும் அந்த நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக மகிந்த தெரிவித்துள்ளார்.
இதனுடன், இந்த அரசாங்கத்தின் செயல்திட்டங்களுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒப்புதல் அளிக்காதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த கேள்விக்கு மகிந்த பதிலளிக்கையில், “இந்த அரசாங்கத்தின் செயல் திட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை அதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது.
எங்களுக்கு சுதந்திரம் உள்ளதுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளது எனவே எந்த நேரத்திலும் எங்கள் கருத்தை தெரிவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.