Search
Close this search box.
இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் கடந்த மே மாதம் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2023 ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (ஜனவரி – மே) ஒப்பிடும் போது இது 11.8 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இலங்கையின் பொருளாதார கொள்கை சீர்திருத்தங்கள் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News