Search
Close this search box.
தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி! அமைச்சர் தகவல்.

தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் சந்தைகளில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி தடைகளை நீக்குவது தொடர்பாக வாகன அசெம்பிளர்களுக்கும் (vehicle assemblers)நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது.

அத்துடன், வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், உதிரிபாகங்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பல உள்ளூர் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் ஆழமான கலந்துரையாடப்பட்டுள்ளது.

Sharing is caring

More News