Search
Close this search box.
முல்லைத்தீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இராமேஸ்வரத்தில் தஞ்சம்

முல்லைத்தீவை (Mulliativu) பிறப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இராமேஸ்வரம் (Rameshwaram) அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள ஈழத்தமிழர்கள் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்தை தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு சிறுவர், ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார், அகதிகளாக வந்தவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

Sharing is caring

More News