Search
Close this search box.
வெள்ள அபாய நிலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த அபாய நிலை படிப்படியாக மறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகுரா தில்தாரா தெரிவித்தார்.

இதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹா, ஜாஎல, வத்தளை, மினுவாங்கொட, கட்டான ஆகிய பகுதிகளில் இன்று படிப்படியாக நீர்மட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, களனி கங்கைப் படுகையின் தாழ்வான பகுதிகளான கடுவெல, பயகம, கொலன்னாவ, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மண்சரிவு அபாயம் தொடர்வதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

Sharing is caring

More News