Search
Close this search box.
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் – வெளியான அறிவிப்பு

புதிய கல்வியாண்டுக்கான (2023/2024) மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை கோருவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு இம்முறை ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் மட்டுமே கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இம்முறை கையேட்டை அச்சிட முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதற்கு மேலும் மூன்று வார கால அவகாசம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, ஜூலை 19ஆம் திகதி வரை விண்ணப்பதாரர்கள் ஒருமுறை மட்டுமே திருத்தங்களைச் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஓகஸ்ட் கடைசி வாரம் அல்லது செப்டெம்பர் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை வெளியிடவும் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News