Search
Close this search box.

மது போதையில் வாகனம் செலுத்திய போலீஸ் பொறுப்பதிகாரி – மயிரிழையில் உயிர் தப்பிய 40 சிறுவர்கள்.

வவுனியா நெடுங்கேணி பகுதியில் புளியங்குளம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி நிறை போதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வவுனியா நெடுங்கேணி பகுதியில் பயணித்து கொண்டிருந்த போலீஸ் வாகனம் திடீரென நிலை தடுமாறி வீதியை விட்டு விலகி வீட்டுக்கானிக்குள் புகுந்துள்ளது. அத்துடன் விபத்து இடம்பெற்ற வீட்டில் சிறுவர்களுக்கான தனியார் வகுப்பும் இடம்பெற்றுள்ளதுடன். தெய்வாதீனமாக அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த 40 சிறுவர்களும் தப்பித்துள்ளதுடன் பாரிய உயிர் சேதமும் தவிர்க்கபட்டுள்ளது. மேலும் குறித்த வீட்டு உரிமையாளர் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் அவரது வீட்டின் வேலி மற்றும் சுவர்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிளும் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் வாகனத்தை செலுத்தி வந்தது நான் தான் என போலீஸ் பொறுப்பதிகாரி தெரிவித்ததாகவும் அப்போது அவர் நிறை போதையில் இருந்ததாகவும் குறித்த வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் விபத்துக்குள்ளான வாகனம் வீதியில் இருந்த மின் கம்பங்களில் மோதி சேதம் அடைந்ததன் காரணமாக அப்பகுதியில் மின்சார ஒழுக்கு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள சில வீடுகளில் மின் உபகரண பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் இப் விபத்தை திசை மாற்ற போலீஸ் கடும் பிராயத்த்தனம் மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த போலீஸ் உத்தியோகத்தர் தற்போது வவுனியா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் – வெளியான அறிவிப்பு

புதிய கல்வியாண்டுக்கான (2023/2024) மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை கோருவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு இம்முறை ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் மட்டுமே கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இம்முறை கையேட்டை அச்சிட முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதற்கு மேலும் மூன்று வார கால அவகாசம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜூலை 19ஆம் திகதி வரை விண்ணப்பதாரர்கள் ஒருமுறை மட்டுமே திருத்தங்களைச் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஓகஸ்ட் கடைசி வாரம் அல்லது செப்டெம்பர் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை வெளியிடவும் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் துயரம்: 33 தேர்தல் அதிகாரிகள் உயிரிழப்பு

இந்திய (india) பொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 தேர்தல் அலுவலர்கள் கடும் வெப்பம் காரணமாக வாக்களிப்பு நிலையங்களிலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்கள் கடும் வெப்பத்தில் தத்தளித்து வருகின்றன. சில மாநிலங்கள் மற்றும் நகரங்களில் வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. ‘ மேலும் உயிரிழந்த அதிகாரி ஒருவருக்கு இந்திய அரசு 1.5 மில்லியன் இந்திய ரூபாய் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளதாக நவ்தீப் ரின்வா ஊடகங்கள் முன் விளக்கமளித்துள்ளார். இந்த நாட்களில் இந்தியாவை பாதித்துள்ள கடும் வெப்பமான காலநிலையால் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 58 என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. 7 கட்டங்களின் கீழ் 44 நாட்கள் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல் முடிவடைந்தது. ஒரு மில்லியன் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 15 மில்லியன் தேர்தல் அலுவலர்கள் தங்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வலயக் கல்விப் பபணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளை மூடும் அதிகாரம் வலயக் கல்விப் பணிமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வலக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. காலநிலை சீர்கேடு காரணமாக இன்றைய தினமும் நாட்டின் சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சகல பாடசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளது. களுத்துறை, ரத்தினபுரி, கேகாலை மாவட்ங்களின் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோமகம, கம்ஹா மற்றும் களனி ஆகிய கல்வி வலயங்களிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையில் தடை: நிதி உள்ளிட்ட சொத்துகள் முடக்கம் – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

ஈழத் தமிழர்கள் சிலரின் அமைப்புகள் உட்பட பதினைந்து தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 210 நபர்களின் அனைத்து நிதி, ஏனைய நிதிச் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்கி இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி இதழை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன விசேட வர்த்தமானி இதழை வெளியிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் அதன்படி, விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE) , தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) என்பவை முடக்கப்பட்டுள்ளன. இதேவேளை, HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் ( JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS) , கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT) ,தமிழ் இளைஞர் அமைப்பு (TYO) , டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM) , Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளன. நபர்கள் இதனிடையே, தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட ராமன் சின்னப்பா அல்லது சின்னப்பா மாஸ்டர், கருணா குலரத்னம் அல்லது நல்லதம்பி, துரைசாமி செல்வகுமார் அல்லது ராஜூ, விடுதலைப் புலி உறுப்பினர் வேலுபிள்ளை ரேவதன், ராமசந்திரன் அபிராம் அல்லது நிரோஸன், சண்முகநுசுசுந்தரம் கந்தாஸ்கரன் அல்லது காந்தசேகரன்,கனகராசா ரவிசங்கர் அல்லது சங்கிலி, கிருஷ்ணபிள்ளை சிவஞானம் உள்ளிட்டோருக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு..!

அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் எனவும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறும், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் இராணுவத்தினருக்கு சாகல ரத்நாயக்க பணிபுரை விடுத்துள்ளார்.

புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்! – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு..

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும், முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். அத்தோடு, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குழாய்களைப்  பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (04) மின்சார நுகர்வோர் கட்டண திருத்தப் பிரேரணையை இறுதி செய்வது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கட்டண பிரிவினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார் செலவுகளை பிரதிபலிக்கும் கட்டண பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த வருடம் கொள்கை முடிவொன்றை எடுத்ததாகவும், அதன்படி ஒவ்வொரு வருடமும் காலாண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, ஜூலை மாதம் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும், இது தொடர்பான கட்டண முன்மொழிவு இந்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலை விடுமுறை தொர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்ளுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றையதினம்(03) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மேலும் சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினமும்(04) நாளைய தினமும்(05) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும்(04) நாளையும் (05) இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு  அறிவித்துள்ளது. மேலும், களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹோமாகம, கம்பஹா மற்றும் களனி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் கடுவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், சீரற்ற காலநிலை மற்றும் அதன் தாக்கத்தினை கருத்திற் கொண்டு பாடசாலைகளை நடத்துவது மற்றும் விடுமுறை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் எடுக்க முடியும் என்று கல்வி  அமைச்சு அறிவித்துள்ளது.

அதிபர் ரணிலின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள்..

வவுனியாவில் மக்களுக்காக காடுகளை விடுவிப்பு செய்யுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த போதிலும் அதிபரின் உத்தரவை சில அரச அதிகாரிகள் உதாசீனப்படுத்துவதாக வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் குற்றஞ்சாட்டியுள்ளார். அபிவிருத்தி குழு அலுவலகத்தில் நேற்றையதினம் (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “ அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து நான் தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தத்திற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் வனவள திணைக்களத்திடம் இருந்து பல்லாயிரக்கணக்கான காணிகளினை விடுவிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் அதிபரின் வேலை திட்டத்தினை மதிக்காமல் செயற்படும் சில அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மக்களுகக்கான இந்த விடயத்தில் கீழ் மட்ட அரச உத்தியோகத்தர்களின் மீது மறைமுக அழுத்தத்தினை பிரயோகிப்பது வேதனையான விடயமாகும். குறிப்பாக இந்த ஊடக சந்திப்பினை மேற்கொண்டதன் நோக்கமானது இவ்விடயத்தினை கிராம சேவையாளர்களிடம் தெரியப்படுத்துவதற்காகவே. ஏன் எனில் வனவள அதிகாரிகளுடன் இணைந்து கிராம சேவையாளர்கள் காணி விடுவிப்பு செய்வதற்கான இடங்களை பார்வையிட்டு அதற்குரிய அனுமதி அளிப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபடுவதாக காண்பிக்கப்படுகின்றது. உங்களுடன் இணைந்து காணி விடுவிப்பதற்குரிய இடங்களை அடையாளப்படுத்தும் போது நாங்கள் உங்களுடன் இணைந்து அடையாளப்படுத்திய மக்களிற்கான காணிகளை ஆக்கிரமிப்பதற்கு வனவள திணைக்களத்திற்கு இடமளிக்க வேண்டாம். மாறாக எல்லைக்கற்கள் போடாமல் இடத்தினை பார்வையிடுகிறோம் என கூறி உயிர் மரங்களில் அடையாளமிட்டு அவ்விடத்தில் ஜிபிஎஸ் எடுத்து அதனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட வனவள திணைக்களமும் வவுனியாவில் உள்ள சில அதிகாரிகளும் நடவடிக்கையெடுத்திருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்…