ஹட்டன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடம் பகுதியில் உள்ள ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் நேற்றையதினம்(03) இரவு பாரிய மண் திட்டு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று(04) காலை நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மீண்டும் அப் பகுதியில் உள்ள மண் திட்டு சரிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் பயன்பாடுகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் பகுதி என்பதால் நிரந்தர கொங்ரீட் மதில் சுவர் எழுப்பி வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
இதற்கான தீர்வை ஹட்டன் நகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.