Search
Close this search box.
ஆபத்தாக பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம் – இலங்கை வந்த வெளிநாட்டவர் பரிதாப மரணம்…

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் புகையிரத சுரங்கப்பாதையில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளபர்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக நானுஓயா ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எல்ல பிரதேசத்தை நோக்கி ரயிலில் பயணித்த வெளிநாட்டு பிரஜையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரயிலின் கதவில் ஆபத்தான முறையில் பயணித்தமையால் சுரங்கப்பாதையில் மோதி இவர் உயிரிழந்ததாக  தெரியவருகின்றது.

நானுஓயா மற்றும் இதல்கஸ்ஹின்ன ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரத சுரங்கப்பாதையில் மோதி இவர் உயிரிழந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனையடுத்து உயிரிழந்தவரது சடலம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரின் உதவியுடன் ஹப்புத்தளை ரயில்  நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Sharing is caring

More News