காலி மாவட்டத்தின் நெலுவ பகுதிக்கு அவசரமாக ஹெலிகொப்டர் ஒன்றை இலங்கை விமானப்படை அனுப்பி வைத்துள்ளது.
பெல் 412 ரக ஹெலிகொப்டர் ஒன்றையே விமானப்படை அவசரமாக அனுப்பியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நெலுவ பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் வகையிலேயே இந்த ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் மேலும் இரண்டு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்