இலங்கையில் உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை நிறுவுவதற்கான சட்டத்தின் வரைவில் உத்தேச ஆணைக்குழுவைச் செயல்படுத்துவதற்கு திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் அசங்க குணவன்ச இதனை தெரிவித்துள்ளார்.
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணிகள் அல்லது நீதித்துறை அதிகாரங்கள் இருக்க வேண்டும்.இல்லையெனில், தேவையை நிவர்த்தி செய்வதற்கு விசேட நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்படலாம் என குணவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தனி நீதிமன்றம் அமைக்கப்படலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே செயலகத்தின் பணிப்பாளர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபித்தல், வழக்குத் தொடுனர் மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் என்பன அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.