Search
Close this search box.
கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து விற்பனை; யாழில் சிக்கிய இருவர்

யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து சென்று விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியில் வைத்து பூட்டப்பட்டிருந்த 190,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை துவிச்சக்கர வண்டியில் வந்த மர்ம நபரொருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் கண்காணிப்பு கமராவின் காணொளியை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர் சாவல்கட்டு பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, விசாரணையில் குறித்த சந்தேக நபர் 30,000 ரூபா பணத்திற்கு ஆறுகால் மடத்தைச் சேர்ந்தவருக்கு கையடக்கத் தொலைபேசியை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கையடக்கத் தொலைபேசியை வாங்கியவரும் கைது செய்யப்பட்டு கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டது.

மேலும், கையடக்கத் தொலைபேசியை திருடியதாக கருதப்படும் சந்தேகநபர் சைக்கிள் திருட்டுகளில் ஆறுமாத காலம் தண்டனை பெற்று விடுதலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News