Search
Close this search box.
யாழ்.மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் – சாதனை படைத்த மாணவன்..!

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாணவன் மதியழகன் டினோஜன் சாதனை படைத்துள்ளார்.

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகின.

இந்நிலையில், குறித்த மாணவன் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 47 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார்.

அத்தோடு யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவனான ம. டினோஜன் பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ (3A) சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும் 2ஏபி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏசி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏஎஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ2பி சித்திகளை 12 மாணவிகளும், ஏபிசி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

மேலும் யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 9 மாணவிகள் 3 ஏ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News