Search
Close this search box.
வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை: மூடப்படும் அபாயத்தில் ஆதார வைத்தியசாலைகள்…

இலங்கைத் தீவில் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அதற்கு பொறுப்பான தரப்பினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வைத்தியர்களின்றி முடங்கிக் கிடக்கும் ஆதார வைத்தியாசாலைகளை மூடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (Government Medical Officers Association – GMOA) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்போது மேற்படி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சம்மில் விஜேசிங்க, எதிர்வரும் வைத்தியர் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்திற்காகவே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை அமைப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால், நாட்டின் மருத்துவமனை அமைப்பில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிகமான மருத்துவர்களுக்கு பயிற்சியளித்து தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி தொடர்ந்து கூறுகின்றபோதிலும் அதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. காரணம் புதிய வைத்தியர்களுக்ககு நாட்டில் வேலை வழங்க முடியாது எனவும் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

1390 வைத்தியர்களைக் கொண்ட குழு, அவர்களின் வேலைவாய்ப்புப் பயிற்சியை முடித்த பின்னர் வேலைவாய்ப்புக்கான பிந்திய நியமனங்களைப் பெறுவதற்கு எட்டு மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டும்.

நோயாளிகளின் பராமரிப்பு சேவைகளுக்கு உதவக்கூடிய இந்த மருத்துவர்களுக்கு இதுவொரு துரதிர்ஷ்டமான சூழ்நிலை.

நியமனம் வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் குறித்து அறிந்திருந்தும் அதற்கு பொறுப்பான தரப்பினர் நடவடிக்கை எடுப்பதில்லை.

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை ஆறு வருடங்களாக புதுப்பிக்கப்படவில்லை.

அரசானது புதிய மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை பிரிவுகளை விரிவுபடுத்திய போதிலும் அவற்றிற்கு மருத்துவர்களை நியமிக்க முடியவில்லை.

அதிலும் சில புதிய மருத்துவமனைகளில் நவீன மருத்துவ உபகரணங்கள் கூட காலாவதியாகிவிட்டன.

நிர்வாகச் சேவைகள் ஆணைக்குழுவின் கவனக்குறைவினால் நாட்டில் மருத்துவமனை அமைப்பு மிகவும் மோசமாகி வருகிறது. இது விரைவில் மருத்துவமரனை அமைப்பை முழுமையான மூடுவதற்கு வழிவகுக்கும்.

மருத்துவர் பற்றாக்குறையால் நாடு முழுவதும் உள்ள 400க்கும் அதிகமான மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மருத்துவப் பிரிவுகள் ஆபத்தில் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு எச்சரித்துள்ளது.

தற்போதைய பிரச்சினைக்க பொறுப்பானவர்கள் தீர்வு காணாவிட்டால் மருத்துவர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் ஆதார வைத்தியசாலைகளை மூடுவது குறித்து GMOA மத்திய குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

Sharing is caring

More News