Search
Close this search box.
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் – அமைச்சர் சுசில் அறிவிப்பு

2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346 976 பரீட்சாத்திகள் நாடுமுழுவதிலுமிருந்து தோற்றியுள்ளனர்.

இதில் 281,445 பாடசாலைப் பரீட்சாத்திகளும் 65,531 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் உள்ளடங்குவர்.

இந்நிலையில் மே 31 முதல் மாணவர்கள் தங்கள் முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையதளம் ஊடாக பார்வையிடலாம் என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்

Sharing is caring

More News