Search
Close this search box.
வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் நிலைப்பாடு!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானிக்கிறது என்றால், அதற்கான வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மாற்றியமைக்காமல் பராமரிக்க தீர்மானித்தள்ளதாக தெரிவித்தார்.

“ஏற்கனவே சில வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் இறக்குமதியை படிப்படியாக தளர்த்துவது முக்கியமான முடிவு. அந்நியச் செலாவணியை எங்களால் நிர்வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

Sharing is caring

More News