Search
Close this search box.
தாமதமாகும் வடக்கு ரயில் அபிவிருத்திப் பணிகள்..! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வடக்கு ரயில்வேயின் அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் பொசன் பௌர்ணமி தின விடுமுறைக்கு முன்னர் பூர்த்தி செய்ய முடியாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு ரயில்வேயின் அபிவிருத்திப் பணிகளை ஒகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, பொசன் விடுமுறையை முன்னிட்டு விசேட பேருந்து சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,

பொசன் பௌர்ணமி தினத்திற்கு முந்திய நாளிலும், பொசன் போயா தினங்களிலும் பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த விசேட பேருந்து சேவைக்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையுடன் இணைந்து விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கால அட்டவணை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Sharing is caring

More News