வாரியபொல வந்துரஸ்ஸ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வந்துரஸ்ஸ, மாவத்தை ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த நபரின் சடலம் மாவத்தை ஏரியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வந்துரஸ்ஸ கலயாய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் வைத்தியசாலையில் வைத்து குறித்த நபரின் பிரேதப் பரிசோதனை இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விலங்கு வேட்டைக்காக போடப்பட்டிருந்த சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வந்துரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.