திருகோணமலை – மூதூர், தோப்பூர் பிரதேசத்திலுள்ள மாலை நேரக் கடைகள் நேற்று திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உணவு கையாண்டமைக்காக இரண்டு மாலை நேர சிற்றூண்டி நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகள் ஐ.எம்.றினூஸ் தெரிவித்தார்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீன் ஆலோசனைக்கமைய மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.