களுத்துறை (Kalutara) – ஹொரணை (Horana) காவல்துறை பிரிவிற்குட்பட்ட அபகஹவத்த பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அபகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மின்கம்பத்திலிருந்த மின்சாரக் கம்பிகள் தரையில் வீழ்ந்து கிடந்த நிலையில் குறித்த பெண் அந்த மின்சாரக் கம்பிகளில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரது சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.