நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (26) இலங்கை தொழிலாளர் காங்ரஸின் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது போகாவத்த அக்கரபத்தனை போடைஸ் இன்ஞஸ்ரீ சாஞ்சிமலை மற்றும் பொகவந்தலாவ பகுதியில் டியன்சின் கெம்பியன் பெற்றோசோ ஆகிய பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதேவளை பெருந்தோட்ட தொழிலாளர்களை சந்தித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் 1,700 ரூபாய் சம்பளம் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை உடனடியாக முன்னெடுக்கமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிருவத்திற்கு பணிப்புரை விடுத்தார்.
இதன் போது இந்த நேரடி சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் நீர் வழங்கள் மற்றும் அம்பகமுவ பிரதேசத்திற்கான இனைப்பாளர் ரவி குழந்தைவேல் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிருவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர்.