Search
Close this search box.
திலித் – கம்மன்பில – விமல் புதிய அரசியல் கூட்டணி!

ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம்’ என்ற தொனிப்பொருளில் அரசியல் கட்சிகள் சிலவும் சிவில் அமைப்புகள் சிலவும் ஒன்றிணைந்து ‘சர்வ ஜன பலய’ என்ற புதிய அரசியல் இயக்கம் ஒன்றை இன்று (27) உருவாக்கியுள்ளனர்.

அதற்காக மவ்பிம ஜனதா கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தலைமையிலான சுயேட்சை உறுப்பினர்களும் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

குறித்த அரசியல் இயக்கத்தை அமைப்பதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

Sharing is caring

More News