இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்சுவா பேக்டெட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இன்று (26) பிற்பகல் ராஜகிரியவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்கும் போது அவருக்கு 53 வயதாகும். 1970 ஆம் ஆண்டு பிறந்த Jean-François Pactet, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக பணியாற்றியுள்ளார்.
இந்தநிலையில், சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.