தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் கையூட்டல் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எஹலியகொட (Eheliyagoda) பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பொறுப்பினை ஒப்படைத்த பெண்ணிடம் 30000 ரூபா கையூட்டல் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.